நினைவூட்டும் வண்ணம், ஒன்பிளஸ் நிறுவனம், இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதன் ஒன்பிளஸ் 9 சீரீஸ் மாடல்களை அறிவித்தது.
கேமரா செயல்திறனை மேம்படுத்த, ஒன்பிளஸ் அதன் ஒன்பிளஸ் 9 தொடருக்காக புகழ்பெற்ற கேமரா தயாரிப்பாளர் ஆன ஹாசல்ப்ளாட் உடன் கூட்டு சேர்ந்தது.
அறிமுகத்தின் போது கூட, இந்த ஸ்மார்ட்போன்களின் கேமரா செயல்திறன் இன்னும் மேம்படுத்தப்படும், இதற்காக ஒன்பிளஸ் நிறுவனம் ஹாசல்ப்ளாட் உடன் தொடர்ந்து பணியாற்றும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி, அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, ஒன்பிளஸ் 9 சீரீஸ் ஒரு புதிய XPan Mode-ஐ பெற்றுள்ளது.
மொபைலுக்கான ஹாசல்ப்ளாட் கேமராவில் உள்ள இந்த புதிய மோட், ஹாசல்ப்ளாடின் எக்ஸ்பான் (XPan) கேமராவைப் பயன்படுத்தும் அனுபவத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதாவது இது 35 மிமீ பார்மெட்டின் நன்மைகளை வழங்குவதுடன், ஒரு படத்தை முழு பனோரமா பார்மெட்டிற்கு விரைவாக மாற்றும் திறனையும் வழங்குகிறது.
எக்ஸ்பான் (மோட்-ஐ) பயன்முறையைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அசல் எக்ஸ்பான் கேமராவைப் போலவே 65:24 விகிதத்தைக் கொண்டிருக்கும்.
ஆக ஒன்பிளஸ் 9 மற்றும் 9 ப்ரோ பயனர்களால் 30 மிமீ மற்றும் 45 மிமீ என்கிற இறுதி நீளம் வரை, ஒன்பிளஸ் கேமரா ஆப்பில் உள்ள வ்யூஃபைண்டரிலிருந்து அணுக கிடைக்கும் முன்னோட்டத்துடன் பனோரமிக் படங்களை எடுக்க முடியும்.
பயனர்களுக்கு அவர்களின் மொபைலில் உண்மையான ஹாசல்ப்ளாட் எக்ஸ்பான் அனுபவத்தை வழங்குவதற்காக எக்ஸ்பான் கேமராவின் தனித்துவமான விவரங்களை ஸ்மார்ட்போனிற்காக மீண்டும் உருவாக்கியதாக ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
XPan பயன்முறையைப் பயன்படுத்தி கிளிக் செய்யப்பட்ட படங்கள் இயல்புநிலை 12MP மோட்-க்கு பதிலாக 48MP மற்றும் 50MP சென்சார்களில் இருந்து க்ராப் செய்யப்படுகின்றன.
இதன் விளைவாக 20 எம்பிக்கு மேல் ஹையர் ரெசல்யூஷன் கொண்ட படம் கிடைக்கும். XPan படங்கள் 30mm-இல் 7552 × 2798 ரெசல்யூஷன் மற்றும் 45mm-இல் 7872 × 2916 ரெசல்யூஷனை கொண்டுள்ளது.
XPan மோட்-இல் டூ கலர் மோட்களும் அணுக கிடைக்கும்!
ஒன்பிளஸ் அதன் எக்ஸ்பான் மோட்-இல் ஒரு கலர் மோட் மற்றும் ஒரு தனித்துவமான பிளாக் அண்ட் ஒயிட் மோட் உட்பட இரண்டு இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ப்ரொபைல்களை உள்ளடக்கியுள்ளது.
XPan மோட் ஆனது பிளாக் அண்ட் ஒயிட் நிறத்தில் திறக்கும், இது XPan கேமராக்களில் பயன்படுத்தப்படும் உன்னதமான பிளாக் அண்ட் ஒயிட் படத்தின் தொனி மற்றும் பாணியைக் குறிக்கிறது.
ஆனால் ஹாசல்ப்லாட், கலர் மோட்-ஐயும் மேம்படுத்தி உள்ளது. ஆக பயனர்கள் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப கலர் மற்றும் பிளாக் அண்ட் ஒயிட் இடையே மாறலாம்.
கடைசியாக, எக்ஸ்பான் மோட்-ஐ பயன்படுத்தி படங்கள் கிளிக் செய்யப்படும்போது, முதலில் அது உங்கள் ஸ்மார்ட்போனில் negative film ஆக சேமிக்கப்படும். பிலிம் வளர்ச்சிக்கு மரியாதை செலுத்துவதற்காக இவ்வாறு செய்ததாக ஒன்பிளஸ் கூறி உள்ளது.
0 Comments