OPPO F19s: எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்?

 இந்தியாவில் வாங்க கிடைக்கும் ஒப்போவின் இந்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் (F19) தொடரின் கீழ் இணையும் நான்காவது மாடல் இதுவாகும்.


ஏற்கனவே மூன்று மாடல்கள்; இப்போது நான்காவது மாடல்!

முன்னதாக ஒப்போ நிறுவனம் இந்த சீரீஸின் கீழ் ஒப்போ F19, F19 Pro மற்றும் F19 Pro + 5G மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போது F19s மாடலும் அதில் இணையவுள்ளது. ஆனால் இதன் சரியான வெளியீட்டு தேதி தற்போது வரை தெரியவில்லை.

ஒப்போ F19s எப்போது அறிமுகமாகும்?

ஒப்போ நிறுவனம் இந்த செப்டம்பர் மாத இறுதியில் அல்லது அக்டோபர் மாத தொடக்கத்தில் அதன் F19s மாடலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதை உறுதிப்படுத்தும் வண்ணம், குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் மார்க்கெட்டிங் புகைப்படங்கள், வடிவமைப்பு மற்றும் சில முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன.

என்ன விலைக்கு வரும்?


டிப்ஸ்டர் சுதன்ஷு வழியாக இந்தியாவில் வரவிருக்கும் இந்த லேட்டஸ்ட் ஒப்போ ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் லீக் செய்யப்பட்டுள்ளது. அவரின் கூற்றுப்படி, இதன் 6 ஜிபி + 128 ஜிபி வேரியன்ட் இந்தியாவில் சுமார் ரூ.19,000 அல்லது ரூ.20,000 க்குள் அறிமுகமாகும்.


என்னென்ன கலரில் வெளியாகும்?

டிப்ஸ்டர் சுதன்ஷு மேலும் கூறுகையில், ஒப்போ விரைவில் F1s மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம். அவர் பகிர்ந்த படங்களின் வழியாக, இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வண்ணங்களில் வெளியாகும் - அது Glowing Black மற்றும் Glowing Gold ஆகும்.

டிசைன் எப்படி இருக்கும்? என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

வெளியான படங்கள், ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ட்ரிபிள் கேமரா அமைப்பு இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.

அது 48 எம்பி ப்ரைமரி கேமராவை க் கொண்டிருக்கலாம், இது ஒப்போவின் மென்பொருள் தந்திரங்களைப் பயன்படுத்தி 108 எம்பி தீர்மானம் கொண்ட படங்களை எடுக்கவும் செய்யலாம்.

மேலும் இதன் கேமரா அமைப்பில் 2MP டெப்த் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ கேமராவையும் நாம் எதிர்பார்க்கலாம்.

ஸ்மார்ட்போனில் ஒரு ஹோல்-பஞ்ச் டிஸ்பிளே உள்ளது. செல்பீ கேமரா, கட்அவுட் ஸ்க்ரீனின் மேல் இடது மூலையில் வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக MySmartPrice வழியாக வெளியான சில பிரத்தியேக லீக்ஸ் தகவல்களின் அடிப்படையில், இது ஒரு Full HD + ரெசல்யூஷன் மற்றும் 20: 9 ஸ்க்ரீன் ரேஷியோ, 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16MP சோனி IMX471 செல்பீ கேமரா சென்சாரையும் பேக் செய்யலாம்.

இது 5000 mAh பேட்டரியை 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கொண்டு வரும். இது லோ பேட்டரி எஸ்எம்எஸ் என்கிற அம்சத்துடன் வரும். இது இயக்கப்பட்டதும், இந்த அம்சம் தானாகவே தற்போதைய லோக்கேஷன் உடன் ஒரு மெசேஜை ப்ரீ-செட் செய்யப்பட்ட ஒரு காண்டாக்ட் நம்பருக்கு அனுப்பும்.


மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ் 11.1, 6 ஜிபி ரேம், ஸ்மார்ட்போனின் இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து 5 ஜிபி மெமரி விரிவாக்கம் போன்றவைகளை எதிர்பார்க்கலாம்.

Post a Comment

0 Comments