Jio Phone Next: 2 வகைகளில் வரும்; வெறும் ரூ.500, ரூ.700 கொடுத்து வாங்கலாம்!

 ஜியோ போன் நெக்ஸ்ட், நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் ஸ்டோர்களுக்கு வர உள்ளது.


இதற்காக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு பெரிய வெளியீட்டிற்கு தயாராகி வருவதாகத் தெரிகிறது.



நினைவூட்டும் வண்ணம், ஜியோ போன் நெக்ஸ்ட் கடந்த ஜூன் மாதத்தில் ரிலையன்ஸ் ஏஜிஎம் மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இது கூகுள் நிறுவனத்துடன் கூட்டாக வெளிவந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பும் ஆகும்.


இந்த "ஜியோ ஸ்மார்ட்போனின்" முன்-முன்பதிவு இந்த வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

இதற்கிடையில் இடி நௌவ் வழியாக வெளியான ஒரு அறிக்கை, அதிகாரப்பூர்வமான இந்தியா அறிமுகத்திற்கு முன்னதாகவே ஜியோ போன் நெக்ஸ்ட்டின் விலை மற்றும் விற்பனை அமைப்பு பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளது.

வெளியான அறிக்கையின்படி, ஜியோ நிறுவனம் அடுத்த 6 மாதங்களில் 50 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளது.

இதற்காக, இந்த டெலிகாம் நெட்வொர்க் ஆனது State Bank of India, Piramal Capital, IDFC First Assure மற்றும் DMI Finance ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து, 10,000 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யவும் முடிவு செய்துள்ளன.


ஜியோ போன் நெக்ஸ்ட் இரண்டு மாடல்களில் கிடைக்கும்!

அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, ஜியோ போன் நெக்ஸ்ட் இந்தியாவில் மலிவான 4 ஜி ஸ்மார்ட்போன் ஆக அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

தற்போது இந்த ஸ்மார்ட்போன் இரண்டு மாடல்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியான அறிக்கையின் படி, அவற்றில் ஒன்று ஜியோ போன் நெக்ஸ்ட் பேசிக் மாடல், மற்றொன்று ஜியோபோன் நெக்ஸ்ட் அட்வான்ஸ் மாடல் ஆகும்.

முந்தையது சுமார் ரூ.5,000 என்கிற விலைக்கும், பிந்தையது சந்தையில் சுமார் ரூ.7,000 முதல் என்கிற புள்ளியில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ போனை நெக்ஸ்ட்டை வெறும் 500 ரூபாய்க்கு வாங்குவது எப்படி?

புதிய ஸ்மார்ட்போனுக்கு மாறும் பயனர்களின் சுமையைக் குறைக்க, ஜியோ போன் நெக்ஸ்ட் வாங்குபவர்கள் வாங்கும் போது முழுத் தொகையையும் செலுத்த வேண்டியதில்லை.

அதற்கு பதிலாக, வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனின் விலையில் 10 சதவிகிதத்தை மட்டுமே செலுத்த வேண்டும் மற்றும் மீதமுள்ள விலையை மேலே குறிப்பிட்டுள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இஎம்ஐ மூலம் செலுத்தலாம்.

இதன் பொருள் ஒரு பேஸிக் மாடலை வெறும் ரூ 500 செலுத்தியும், மீதி ஈசி-இஎம்ஐ விருப்பங்கள் மூலமாகவும் உங்களுடையதாக சொந்தமாக்கலாம். அதேபோல், அட்வான்ஸ்டு மாடலை வெறும் 700 ரூபாய்க்கு வாங்கலாம்.

மேற்கூறிய வங்கிகளுக்கு மேலதிகமாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நான்கு வங்கி-அல்லாத நிதி நிறுவனங்களுடன் (NBFCs) ரூ.2,500 கோடி மதிப்பிலான கடன் ஆதரவு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.


எப்படியிருந்தாலும், வெளியான அறிக்கையில் எவவ்ளவு விஷயங்கள் உண்மையாகும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், நாம் விரைவில் சில உத்தியோகரபூர்வ அறிவிப்பை எதிர்நோக்கலாம்.

Post a Comment

0 Comments