பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) தனது ப்ரீபெயிட் பிரிவின் கீழ் மிகவும் Perfect ஆன 30 டேஸ் வேலிடிட்டியை வழங்கும் ஒரு 4G ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டுள்ளது. அதென்ன ரீசார்ஜ்? அதன் விலை என்ன? அது என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? இது ஏன் ஸ்பெஷல்? என்பதை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.
அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனம் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை விட சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது என்றே கூறலாம்.
ஏனெனில் மற்ற பயனர்கள் 28 மாதங்கள், 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியை தத்தம் ஆபரேட்டர்களிடமிருந்து பெறும் நேரத்தில் BSNL பயனர்கள் சரியான ஒரு மாதம், இரண்டு மாதங்கள் அல்லது மூன்று மாதங்கள் என்கிற முழுச் செல்லுபடியை வழங்குகிறது.
இப்படியாக, BSNL சமீபத்தில் 30 நாட்கள் செல்லுபடியாகும் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, மேலும் இது மொத்த டேட்டா நன்மையுடன் வருகிறது. இதன் பொருள் பயனர்கள் தினசரி டேட்டா வரம்பால் கட்டுப்படுத்தப்பட மாட்டார்கள்.
நாம் இங்கே பேசும் திட்டம் - BSNL 247 ஆகும். இது ஒரு 4G ப்ரீபெய்ட் திட்டம் ஆகும். இது "STV_247" என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த திட்டம் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள் ஆகியவற்றுடன் 50 ஜிபி அளவிலான மொத்த டேட்டாவையும் வழங்குகிறது.
இந்த திட்டத்துடன் வழங்கப்படும் 50 ஜிபி டேட்டாவை பயனரால் ஒரே நேரத்தில் அல்லது 50 நாட்களில் பயன்படுத்தப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
கூடுதலாக இந்த திட்டம், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகளின் பயன்களையும் தொகுக்கிறது.
இந்த திட்டம் வழங்கும் 50 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை "காலி" செய்த பிறகு, பயனருக்கான இணைய வேகம் 80 Kbps ஆகக் குறையும் என்பதையும் நினைவில் கொள்க.
தினசரி வரம்புகள் இல்லாமல் ஏதேவையான டேட்டாவை பெற விரும்பும் பயனர்களுக்கு இது ஒரு நல்ல திட்டமாகும், மேலும் இது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
30 நாட்கள் வேலிடிட்டி + 50 ஜிபி டேட்டா என்றால், நீங்கள் சராசரியாக தினசரி 1.5 ஜிபிக்கு மேல் டேட்டாவை பெறலாம்.
இதன் மொத்த டேட்டா நன்மையையும் நீங்கள் தீர்த்த பின்னரும் கூட, டேட்டா தேவை ஏற்பட்டால், 4ஜி டேட்டா வவுச்சர் மூலம் ரீசார்ஜ் செய்யலாம்.
50 ஜிபி என்கிற டேட்டா வரம்பு தீர்ந்தாலும், குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் 30 நாட்களுக்கு இருக்கும். ஒருவேளை திட்டத்துடன் பயன்படுத்தப்படாத டேட்டா நன்மை ஏதேனும் இருந்தால் அது செல்லுபடியாகும் நாளன்று காலாவதியாகும்.
0 Comments