இந்த ஆண்டு பிப்ரவரியில் கூகுள் தனது தேடல் முடிவுகளில் (சேர்ச் ரிசல்ட்ஸ்) ஒரு புதிய அம்சத்தை / வசதியை அறிமுகப்படுத்தியது - அது About this result என்கிற அம்சமாகும்.
இந்த அம்சத்தின் பயன் என்ன?
இது குறிப்பிட்ட தேடல் முடிவுகளில் தோன்றும் வலைத்தளங்களைப் பற்றிய context (சூழ்நிலைகள்) / additional (கூடுதல்) தகவலை பயனர்களுக்கு வழங்குகிறது.
முதலில் அமெரிக்காவில்.. இப்போது இந்தியாவிற்கும்!
ஆரம்பத்தில் இந்த அம்சம் அமெரிக்காவில் மட்டுமே கிடைத்தது. ஆனால், ஒன்லி டெக் வழியாக வெளியாகியுள்ள ஒரு அறிக்கையின்படி, About this result என்கிற கூகுளின் புதிய அம்சம் இப்போது இந்தியாவில் உள்ள பயனர்களுக்கும் வெளிவருகிறது.
இந்த அம்சத்தை பற்றி கூகுளின் கருத்து என்ன?
இந்த அம்சம் கூகுள் சேர்ச் பயனர்களுக்கு கூகுள் சேர்ச் பக்கத்தில் தோன்றும் இணையதளங்கள் / முடிவுகள் பற்றி மேலும் அறிய உதவுகிறது.
இது பயனர்கள் சரியான context-ஐ பெற உதவும், குறிப்பாக உடல்நலம் அல்லது நிதித் தகவல் போன்ற முக்கியமான ஒரு விடயத்தை பற்றி தேடும் போது, குறிப்பிட்ட தேடலுக்கான முடிவைப் பற்றிய கூடுதல் தகவலை வழங்க இந்த அம்சம் பெரியதும் கைகொடுக்கும்.
மேலும் இந்த அம்சம் ஒருவருக்கு ‘மற்றொரு தேடலை நிகழ்த்தாமலேயே பயனுள்ள தகவல்களைக் கண்டுபிடிக்க’ உதவுகிறது என்றும் கூகுள் கூறுகிறது.
இந்த அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?
கூகுள் சேர்ச்சின் இந்த 'அபௌட் திஸ் ரிசல்ட்' அம்சமானது டெஸ்க்டாப், மொபைல் வெப் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் உள்ள கூகுள் ஆப்பில் கிடைக்கிறது.
ரிசல்ட் கார்டின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று டாட் ஐகான்களை கிளிக் செய்வதன் மூலம் இந்த அம்சத்தை ஒருவர் அணுகலாம்.
பெரும்பாலும் விக்கிபீடியா தான்.. இல்லனா?
குறிப்பிட்ட அம்சத்தை இயக்கியதும், கூகுள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், விக்கிபீடியாவில் இருந்து வலைத்தளத்தின் விளக்கத்தைக் காண்பிக்கும். ஒரு வலைத்தளத்தில் விக்கிபீடியா விளக்கம் இல்லை எனில், கூகுள், கிடைக்கப்பெறும் additional context நிரம்பிய பக்கத்தை காட்டும்.
போலியான வலைத்தளங்களுக்கு வேட்டு!
இதன் அம்சத்தின் கீழ் ஒரு வலைத்தளத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு மேலதிகமாக, நீங்கள் இணையத்தில் ப்ரவுஸ் செய்யும் போது பாதுகாப்பாக இருக்க உதவும் HTTPS protocol-ஐயும் சரி பார்க்க முடியும். சுறுக்க்கமாக சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் போலி வலைதளங்களுக்கு செல்ல மாட்டீர்கள்.
மேலும் பயனர்களின் கேள்விகளுடன் சரியான பொருத்தும் முடிவுகளை கொடுக்க, கூகுள் சேர்ச்சால் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான காரணிகள் பற்றிய தகவல்களையும் இது காண்பிக்கும். அது மக்களுக்கு எந்த முடிவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை முடிவு செய்ய மேலும் உதவும்.
0 Comments