வெறும் ரூ.8,999-க்கு அறிமுகமான இன்பினிக்ஸ் ஹாட் 11; Flipkart வழியாக வாங்கலாம்!

 இந்தியாவில் இன்பினிக்ஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக இன்பினிக்ஸ் ஹாட் 11 மற்றும் இன்பினிக்ஸ் ஹாட் 11 எஸ் மாடலால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.



இவைகள் முற்றிலும் புதிய ஹாட் 11 சீரீஸ் தொடரின் கீழ் வந்துள்ள முதல் மாடல்கள் ஆகும் மற்றும் இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜின் கீழ் வருகின்றன, ஆனால் ஹூட்டின் கீழ் வெவ்வேறு ப்ராசஸர்களைப் பெறுகின்றன.


வெண்ணிலா இன்பினிக்ஸ் ஹாட் 11 மாடல் நான்கு வண்ண விருப்பங்களில் வந்தாலும், இன்பினிக்ஸ் ஹாட் 11 எஸ் மாடல் மூன்று வண்ண விருப்பங்களில் மட்டுமே வருகிறது.



மற்றொரு ஒற்றுமையாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு ஓஎஸ்-இன்மேல் நிறுவனத்தின் சொந்த XOS 7.6 ஸ்கின் கொண்டு இயங்குகின்றன.

இந்திய விலை மற்றும் விற்பனை:

வெண்ணிலா இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் ரூ.8,999 க்கும் மற்றும் இன்பினிக்ஸ் ஹாட் 11 எஸ் மாடல் ரூ.10,999 க்கும் வாங்க கிடைக்கும்.

இரண்டு ஸ்மார்ட்போன்களுமே பிளிப்கார்ட் வழியாக விற்பனை செய்யப்படும்.

இன்பினிக்ஸ் ஹாட் 11 மாடல் ஆனது 7 டிகிரி பர்பிள், எமரால்டு கிரீன், போலார் பிளாக் மற்றும் சில்வர் வேவ் கலர் ஆப்ஷன்களில் வர மறுகையில் உள்ள இன்பினிக்ஸ் ஹாட் 11 எஸ் மாடலோ 7 டிகிரி பர்பிள், க்ரீன் வேவ் மற்றும் போலார் பிளாக் வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும்.


வருகிற செப்டம்பர் 21 ஆம் தேதி இன்பினிக்ஸ் ஹாட் 11 எஸ் விற்பனைக்கு வரும். வெண்ணிலா இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போனின் விற்பனை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஹேண்ட் செட் மீதான ஒரு வருட உத்தரவாதமும், பாகங்கள் மீது 6 மாத உத்தரவாதமும் கொண்டு வருகிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

- டூயல் சிம் (நானோ) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான XOS 7.6 ஸ்கின்
- 6.6-இன்ச் Full எச்டி+ (1,080x2,408 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே
- 20: 9 ஸ்க்ரீன் ரேஷியோ
- 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 4 ஜிபி எல்பிடிடிஆர் 4 ரேம்
- மீடியாடெக் ஹீலியோ ஜி 70 எஸ்ஓசி
- 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 256 ஜிபி வரை பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் ஸ்டோரேஜை விரிவாக்க முடியும்.
- எஃப்/1.8 லென்ஸ் மற்றும் குவாட்-எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா அமைப்பு
- எஃப்/2.0 லென்ஸ் மற்றும் இரட்டை எல்இடி ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் AI செல்பீ கேமரா
- 5,200mAh பேட்டரி
- 10W சார்ஜிங் ஆதரவு
- அளவீட்டில் 164.7x76.2x8.9 மிமீ
- எடையில் 201 கிராம்.

இன்பினிக்ஸ் ஹாட் 11 எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

- டூயல் சிம் (நானோ) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 7.6 ஸ்கின்
- 6.78 இன்ச் Full எச்டி+ (1,080x2,480 பிக்சல்கள்) எல்டிபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே
- 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 20.5: 9 ஸ்க்ரீன் ரேஷியோ
- என்இஜி டைனோரெக்ஸ் டி 2 எக்ஸ் -1 கிளாஸ் பாதுகாப்பு
- 4ஜிபி LPDDR4 ரேம்
-மீடியாடெக் ஹீலியோ G88 SoC ப்ராசஸர்
- 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் 256 ஜிபி வரை விரிவாக்க முடியும்
- ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
- 50எம்பி + 2 எம்பி + AI- பவர்டு லென்ஸ்
- குவாட்-எல்இடி ஃபிளாஷ்
- டூயல் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் AI செல்பீ கேமரா
- 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5,000mAh பேட்டரி
- அளவீட்டில் 168.9x77x8.82 மிமீ
-எடையில் 205 கிராம்.

ஃபெர்பார்மன்ஸ்MediaTek Helio G88
டிஸ்பிளே6.78 inches (17.22 cm)
சேமிப்பகம்64 GB
கேமரா50 MP + 2 MP AI Triple Camera
பேட்டரி5000 mAh
price_in_india13999
ரேம்4 GB

Post a Comment

0 Comments