ஆக.23 இந்தியாவில் அறிமுகமாகும் Vivo Y33s போனின் விலை இவ்ளோதானா!?

 

வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள விவோ Y33s ஸ்மார்ட்போனின் பிரதான அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் லீக் ஆகியுள்ளது.

 

ஹைலைட்ஸ்:

  • ஆகஸ்ட் 23 ஆம் தேதி இந்தியாவிற்கு வரும் புதிய விவோ ஸ்மார்ட்போன்
  • அது விவோ Y33s மாடல் ஆகும்
  • இது அமேசான் வழியாக வாங்க கிடைக்கும்
  • ஈசியான கேள்விகளுக்கு பதில் சொல்லி மிகப்பெரிய பரிசுகளை வெல்லலாம்
Vivo நிறுவனம் இந்தியாவில் அதன் அடுத்த புதிய ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை (வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதி) அறிவித்த பின்னர் விவோ Y33s மாடலின் அம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆனது அதனை தொடர்ந்து தற்போது அதன் விலை விவரங்களும் லீக் ஆகியுள்ளது.


Vivo Y21 விலைய சொன்னா Realme 8 5G, Redmi

விவோ ஒய் 33எஸ் ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியாவில் சிறிது நேரம் காணப்பட்டது, அதன் வழியாக விலை பற்றியத் தகவல் மற்றும் விற்பனை போன்ற விவரங்களை நம்மால் அறிய முடிந்தது.


அம்சங்களை பொறுத்தவரை, Vivo Y33s ஆனது 6.58-inch full-HD+ டிஸ்பிளேவைக் கொண்டிருக்கலாம் மற்றும் MediaTek Helio G80 SoC மூலம் இயக்கப்படலாம்.

மேலும் இது 50 மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுருக்கலாம். அமேசாபில் வெளியான இந்த லிஸ்டிங் வெளியான வேகத்திலேயே நீக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் விவோ ஒய் 33 எஸ் ஸ்மார்ட்போனின் (எதிர்பார்க்கப்படும்) விலை?

விவோ ஒய் 33 எஸ் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பமானது இந்தியாவில் ரூ.17,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்

வெளியான உடனேயே மறைந்தும் போன அமேசான் லிஸ்டிங் இந்த போன் ஒரு Midday Dream வண்ண விருப்பத்தில் வரக்கூடும் என்பதைக் காட்டுகிறது மற்றும் நோ காஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகளுடன் பட்டியலிடப்படும் என்பதையும் வெளிப்படுத்தியது


வடிவமைப்பை பொறுத்தவரை, இந்த போனில் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே இடம்பெற வாய்ப்புள்ளது. தவிர பக்க-பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் பின்புறத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம்.

Vivo Y33s ஸ்மார்போனில் வேறு என்னெண்ணன் அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

மற்ற அம்சங்களைப் பொறுத்தவரை, முந்தைய லீக்ஸ்களின் அடிப்படையில், Vivo Y33s ஆனது Android 11 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட Funtouch OS 11.1-ஐ கொண்டிருக்கும்.

மேலும் இது 6.58 இன்ச் Full HD+ (2,408x1,080 பிக்சல்கள்) ஹாலோ ஃபுல்வியூ டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும்.

8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைந்த ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 சிஓசி மூலம் இந்த போன் இயக்கப்படும்.


Vivo Y33s ஆனது 50 மெகாபிக்சல் மெயின் கேமரா, 2 மெகாபிக்சல் பொக்கே சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வரலாம்.

செல்பீக்களுக்கு, இது 16 மெகாபிக்சல் கேமராவை பெறலாம்.

Vivo Y33s ஆனது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்யலாம். கனெக்டிவிட்டிகளை பொறுத்தவரை, இது 4G LTE, டூயல் பேண்ட் Wi-Fi, ப்ளூடூத் v5 மற்றும் USB OTG ஆகியவைகளை கொண்டிருக்கும்.


இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் கொண்டிருக்கும்

Post a Comment

0 Comments