ஆக.23-ல் ரூ.10,000 பட்ஜெட்டில் இந்தியாவில் அறிமுகமாகும் புது ரியல்மி போன்

Realme நிறுவனம் ரூ.10000 பட்ஜெட்டில் வெளியான அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் மாடல் ஒன்றை வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளது.

 

ஹைலைட்ஸ்:

  • பட்ஜெட் விலையில் இந்தியாவிற்கு வரும் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்
  • அது சி21ஒய் மாடல் ஆகும்
  • இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களின் கீழ் வெளியாகலாம்
Realme C21Y ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் எப்போது அறிமுகமாகும் என்கிற தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று ரியல்மி நிறுவனம் அறிவித்துள்ளது மற்றும் இந்த வெளியீடு Realme.com வழியாக நடைபெறும்.
நினைவூட்டும் வண்ணம், Realme C21Y கடந்த மாதம் வியட்நாமில் வெளியிடப்பட்டது. இது பின்புறத்தில் 13 மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது.

Realme C21Y ஆனது யுனிசாக் T610 SoC மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது மற்றும் இதன் பின்புறத்தில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது.

இந்தியாவில் Realme C21Y ஸ்மார்ட்போனின் (எதிர்பார்க்கப்படும்) விலை?

Realme C21Y மாடலின் இந்திய அறிமுகம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடக்கும் என்று ரியல்மி நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பு மூலம் அறிவித்தது. இதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மைக்ரோசைட் ஒன்றும் Realme.com இல் நேரலைக்கு வந்துள்ளது.

குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் டீசர் பக்கம் இந்த போன் கிராஸ் ப்ளூ மற்றும் கிராஸ் பிளாக் கலர் ஆப்ஷன்களில் வரும் என்பதை உறுதி செய்கிறது.


விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது வியட்நாம் மாடலின் அதே வரம்பில் தான் விலை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நினைவூட்டும் வண்ணம் ரியல்மி C21Y ஸ்மார்ட்போனின் 3GB + 32GB ஸ்ரோரேஜ் மாடல் ஆனது வியட்நாமில் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.10,500 க்கும், அதன் 4GB + 64GB ஆப்ஷன் ஆனது தோராயமாக ரூ.12,000 க்கும் அறிமுகமானது.

Realme C21Y ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

Realme C21Y ஸ்மார்ட்போன் Android 10 ஓஎஸ் அடிப்படையிலான Realme UI கொண்டு இயங்குகிறது.

இது 6.5-இன்ச் அளவிலான HD+ (720x1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

மேலும் இது மாலி- G52 GPU உடன் இணைந்த ஆக்டா கோர் யுனிசாக் T610 SoC மூலம் இயக்கப்படுகிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வரை ஸ்டோரேஜ் விருப்பங்கள் உள்ளன. உடன் பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக ஸ்டோரேஜி மேலும் விரிவாக்கலாம்.

இந்த பட்ஜெட் ரியல்மி போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. அதில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் பிளாக் அண்ட் ஒயிட் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உள்ளது.

முன்பக்கத்தில், 5 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர் உள்ளது.

Realme C21Y ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. சுவாரசியமாக இது ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

கனெக்டிவிட்டிகளை பொறுத்தவரை, இது எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி 5, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்ஜாக் மற்றும் சார்ஜ் செய்வதற்கான மைக்ரோ-யூஎஸ்பி போர்ட்டுடன் வருகிறது.

இதன் பின்புறத்தில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது 

Post a Comment

0 Comments