50MP கேமரா, OxygenOS 12 உடன் இந்திய அறிமுகத்திற்கு ரெடியாகும் OnePlus 9RT

இந்தியாவில் அடுத்து வெளியாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆக ஒன்பிளஸ் 9 ஆர்டி மாடல் இருக்கலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதன் வெளியீடு வருகிற அக்டோபரில் நிகழலாம். மேலும் இதன் சில பிரதான அம்சங்களை பற்றியும் தகவல் கிடைத்துள்ளது.

 

ஹைலைட்ஸ்:

  • அடுத்த ஒன்பிளஸ் மாடலின் பெயர் மற்றும் அம்சங்கள் வெளியானது
  • வருகிற அக்டோபர் 2021-இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்
  • இதுவொரு கேமரா சென்ட்ரிக் ஸ்மார்ட்போனாக இருக்கும
கடந்த 2020 ஆம் ஆண்டில் ஒன்பிளஸ் நிறுவனம் - வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு 'டி' மாடல்களைத் தொடங்குவதற்குப் பதிலாக - ஒன்பிளஸ் 8டி என்கிற சிங்கிள் மாடலை மட்டுமே அறிமுகப்படுத்தியது, அதாவது ஒன்பிளஸ் 8டி ப்ரோ மாடலை கைவிட்டது.
அதே பாணியை தான் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 9 சீரீஸிலும் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த நேரத்தில் தான் ஒரு நம்பகமான டிப்ஸ்டர் அதன் 'நமபர்' சீரீஸின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு 9டி மாடல் இருக்காது என்று கூறினார், அதில் இருந்து 9டி மாடலை பற்றிய பேச்சுக்கள் மேலோங்கவில்லை.
இதற்கிடையில் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 9-சீரீஸில் இன்னும் ஒரு மாடலை வெளியிடலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்ட்ராய்டு சென்ட்ரல் வழியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, நிறுவனத்தின் அடுத்த முதன்மை ஸ்மார்ட்போன் - ஒன்பிளஸ் 9RT என்று அழைக்கப்படும் மற்றும் அது அக்டோபரில் அறிமுகமாகும்.

இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 9R மீது சுமாரான மேம்படுத்தல்களைக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது, மேலும் இது இந்தியா மற்றும் சீனா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளுக்கு மட்டுமே வெளியாகும் என்றும் யூகிக்கப்படுகிறது.


ஒன்பிளஸ் 9RT மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

வன்பொருள் அம்சங்களைப் பொறுத்தவரை, ஒன்பிளஸ் 9 ஆர்டி ஆனது ஒன்பிளஸ் 9 ஆர் ஸ்மார்ட்போனின் அடித்தளமாகவே இருக்கும், அதாவது இது அதே 120 ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் 870 SoC ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

துரதிருஷ்டவசமாக, இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC தவற விடுகிறது.

இருப்பினும், அறிக்கையின்படி, இது கேமராவை மையமாகக் கொண்ட பல மேம்படுத்தல்களை பெறலாம்.

அதாவது ஒன்பிளஸ் 9 ஆர்டியில் 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 766 மெயின் சென்சார் இடம்பெறலாம், இது ஒன்பிளஸ் 9 சீரீஸ் மற்றும் நோர்ட் 2 மாடலில் இருக்கும் அதே சென்சார் ஆகும். நினைவூட்டும் வண்ணம், ஒன்பிளஸ் 9 ஆர் ஆனது 48 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 586 சென்சாரைக் கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 9 ஆர்டி ஆனது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 12-இல் இயங்கும் முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனாகவும் இருக்கலாம், ஆனால் இது கலர்ஓஎஸ்ஸை அடித்தளமாகப் பயன்படுத்தும்.

ஆக்ஸிஜன்ஓஎஸ் 12 ஆனது மிகவும் ஒருவேளை கலர்ஓஎஸ்ஸுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கலாம். மேலும் அது OnePlus Launcher உட்பட work-life Balance, Zen Mode, Scout மற்றும் Shelf போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கலாம்.

இதுதவிர்த்து ஆக்ஸிஜன்ஓஎஸ் 12 ஆனது floating windows மற்றும் சில அம்சங்களை கலர்ஓஎஸ் 11-இல் இருந்து கடனும் வாங்கலாம் என்று கூறப்படுகிறது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, இந்த ஆண்டின் பிற்பகுதியில் இரண்டு நோர்ட் மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று வெளியான அறிக்கை குறிப்பிடுவது சுவாரஸ்யமானது, ஆனால் இவை இந்தியாவில் நடக்குமா அல்லது உலகளாவிய சந்தைகளுக்காக வெளியாகுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இருப்பினும், கடந்த மாதம் நடந்த Nord 2 வெளியீட்டை கருத்தில் கொண்டு, இவை Nord N- தொடரின் ஒரு பகுதியாக இருக்கும் என்று நாம் நம்பலாம்.

Post a Comment

0 Comments