புது டிவி வாங்குற ஐடியா இருக்கா? அப்போ ஆக.26 கண்டிப்பா வாங்கிடலாம்

வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடக்கும் Xiaomi நிறுவதன் Smarter Living Event இல் இந்தியாவிற்கான புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களாக Mi TV 5X சீரீஸ் அறிமுகமாகும் என்பது சீன நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.

 

ஹைலைட்ஸ்:

  • இந்தியாவுக்கு வரும் புதிய மி ஸ்மார்ட் டிவிகள்
  • வருகிற ஆகஸ்ட் 26 அறிமுகமாகும்
  • அதே நாளில் மேலும் சில சியோமி தயாரிப்புகளும் வெளியாகும்
இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவியாக
Mi TV 5X மாடல் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடக்கும் Xiaomi Smarter Living 2022 நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்திய சந்தையில் 43-இன்ச், 50-இன்ச் மற்றும் 55-இன்ச் மாடல்களை உள்ளடக்கிய பிரபல மி டிவி 4எக்ஸ் தொடரைப் பின்பற்றி வரும் இந்த புதிய டிவி சீரீஸின் சில அம்சங்களை சியோமி டீஸ் செய்துள்ளது.

அதன்வழியாக மி டிவி 5 எக்ஸ் ஆனது மெட்டல் ஃப்னிஷ், குறுகிய பெசல்களைக் கொண்ட நேர்த்தியான டிஸ்பிளே, புதிய தலைமுறை பேட்ச்வால் இன்டர்பேஸ் மற்றும் பலவற்றைக் கொண்டிருக்கும்.

நினைவூட்டும் வண்ணம், சியோமி தனது ஸ்மார்ட்டர் லிவிங் 2022 நிகழ்வை வருகிற ஆகஸ்ட் 26 மதியம் 12 மணிக்கு IST (நண்பகல்) தொடங்கும். அதில் நிறுவனத்தின் சில புதிய தயாரிப்புகள் அறிவிக்கப்படும்.

இந்த நிகழ்வில் Mi பேண்ட் 6 மற்றும் Mi நோட்புக் அறிமுகப்படுத்தப்படும் என்பதை சியோமி ஏற்கனவே உறுதி செய்துவிட்ட நிலையில் இப்போது, Mi TV 5X சீரீஸ் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

சியோமியின் புதிய தொடர் ஸ்மார்ட் டிவிகளின் இந்திய அறிமுகம் சியோமி இந்தியாவின் ட்விட்டர் அக்கவுண்ட் வழியாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட நிகழ்விற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஈவென்ட் பேஜும் நேரலைக்கு வந்துள்ளது, அது Mi TV 5X டிவியின் சில அம்சங்களைக் காட்டுகிறது.


அதாவது மி டிவி 5 எக்ஸ் ஆனது (முன்னரே குறிப்பிட்டபடி) மெட்டல் ஃபினிஷ் கொண்ட குறுகிய பெசல்களுடன் வரும். மேலும் இது “class-leading power" என்று குறிப்பிடப்பட்டுள்ள டால்பி-பவர்டு ஆடியோவை வழங்கும்.

மேலும் இந்த சீரீஸ் வழியாக பிக்சர் குவாலிட்டியும் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும் Xiaomi கூறுகிறது. உடன் இது environment responsive என்றும் சியோமி கூறுகிறது. ஒருவேளை இதில் சுற்றுசூழலுக்கு ஏற்ப படத்தின் தரம் அல்லது பிரகாசத்தை மாற்றும் அல்லது சரிசெய்யும் ஒருவித சுற்றுப்புற ஒளி (ஆம்பியண்ட் லைட்) சென்சார் இருக்கலாம்.

மேலும் Mi TV 5X ஆனது புதிய தலைமுறை PatchWall இன்டர்பேஸையும் பெறும். சிறந்த கூகுள் அசிஸ்டென்ட் சேவைக்காக இது ஃபார்-பீல்ட் மைக்குகளுடன் வரும்.

ஆக மொத்தம் தற்போது வரை இந்நிகழ்வில் 3 சாதனங்கள் அறிமுகம் செய்யப்படுவது / அறிவிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது - Mi Band 6, Mi Notebook மற்றும் Mi TV 5X.
முன்னதாக சியோமி அதன் மி பேண்ட் 6 மாடலை வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும் ஸ்மார்ட்டர் லிவிங் நிகழ்வின் ஒரு பகுதியாக இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று அறிவித்து இருந்தது.

அதே நிகழ்வில் சியோமி நிறுவனம் அதன் புதிய மி நோட்புக் ஒன்றையும் அறிமுகம் செய்வதாக அறிவித்தது. இந்த 2 தயாரிப்புகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு 

Post a Comment

0 Comments