விவோ X70 ப்ரோ பிளஸ்: இன்று முதல் இந்திய விற்பனை ஆரம்பம்! விலை? அம்சங்கள்?

 இந்தியாவில் விவோ எக்ஸ் 70 ப்ரோ மற்றும் விவோ எக்ஸ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த செப்.30 ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே X60 சீரீஸின் வாரிசுகளாக வருகின்றன மற்றும் எக்ஸ்60 சீரீஸ் மாடல்களை விட கணிசமான மேம்பாடுகளை பேக் செய்கின்றன. மேலும் எதிர்பார்க்கப்பட்டபடியே வெண்ணிலா மாடலான எக்ஸ்70 இந்தியாவிற்கு வரவில்லை.



இரண்டிலும் பிரீமியம் மாடலான எக்ஸ் 70 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ், 50 எம்பி ப்ரைமரி கேமரா, குவாட் எச்டி+ 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 55W பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது.

விவோ X70 ப்ரோ பிளஸின் விலை மற்றும் விற்பனை:

விவோ எக்ஸ் 70 ப்ரோ பிளஸ் - 12 ஜிபி + 256 ஜிபி - ரூ.99,999

இது கடந்த செப்டம்பர் 30 முதல் முன்பதிவு செய்ய கிடைத்தது. இன்று முதல், அதாவது அக்டோபர் 12 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும்.

முன்பதிவு சலுகைகளை பொறுத்தவரை, பங்குதாரர் வங்கிகள் வழியாக 10 சதவீதம் வரை கேஷ்பேக், 6 மாதங்கள் வரை முழுமையான மொபைல் டேமேஜ் பாதுகாப்பு மற்றும் விவோ மேம்படுஅப்கிரேட் போன்றவைகள் அணுக கிடைத்தது.

விற்பனையை பொறுத்தவரை, இது vivo.com/in, Flipkart மற்றும் இந்தியா முழுவதும் முன்னணி ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகளின் வழியாக வாங்க கிடைக்கும்.

விவோ எக்ஸ் 70 ப்ரோ+ - பிரதான அம்சங்கள்:

- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 6.78 இன்ச் அல்ட்ரா-எச்டி AMOLED டிஸ்ப்ளே
- 12 ஜிபி ரேம்
- 512 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 888+ எஸ்ஓசி


- எக்ஸ்70 ப்ரோ மாடலைப் போலவே குவாட் ரியர் கேமரா அமைப்பு
- ஆனால் 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸைப் பெறுகிறது
- 5,000mAh பேட்டரி
- 55W ஃப்ளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 2.4GHz மற்றும் 5.1GHz பேண்ட்ஸ் உடன் டூயல் பேண்ட் வைஃபை
- 5ஜி ஆதரவு
- ப்ளூடூத் v5.2
- ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, QZSS, யூஎஸ்பி டைப்-சி மற்றும் யூஎஸ்பி OTG.

விவோ எக்ஸ் 70 ப்ரோ - பிரதான அம்சங்கள்:

விவோ எக்ஸ் 70 ப்ரோவின் அம்சங்கள் கிட்டத்தட்ட வெண்ணிலா விவோ எக்ஸ் 70-வை போன்றது தான். வேறுபாடுகள் -ப்ராசஸர், கேமரா அமைப்பு மற்றும் பேட்டரியில் உள்ளது.

- 12 ஜிபி ரேம்
- 512 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- எக்ஸினோஸ் 1080 எஸ்ஓசி
- குவாட் ரியர் கேமரா அமைப்பு
- 50 மெகாபிக்சல் மெயின் கேமரா
- 8 மெகாபிக்சல் பெரிஸ்கோப் லென்ஸ்
- 44W ஃப்ளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 4,500mAh பேட்டரி

Post a Comment

0 Comments