Vivo Y20T இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள் & விற்பனை விவரங்கள்!

 இது செல்பீ ஸ்னாப்பருக்கான அதே வாட்டர் டிராப் நாட்ச், பாதுகாப்புக்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பை தக்க வைத்திருக்கிறது.


Vivo Y20T மாடலின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 6.51-இன்ச் அளவிலான HD+ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662, 13MP மெயின் கேமரா, Android 11 ஓஎஸ், 18W ஃபாஸ்ட்-சார்ஜிங் ஆதரவு கொண்ட 5000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது. விவோ ஒய் 20 டி ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் என்ன? இந்தியாவில் இதன் விலை நிர்ணயம் என்ன? எப்போது முதல் விற்பனை? இதோ விவரங்கள்.

விவோ ஒய் 20 டி இந்திய விலை, விற்பனை தேதி:

இந்தியாவில் விவோ ஒய் 20 டி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது ரூ.15,490 க்கு வாங்க கிடைக்கும் மற்றும் இது அப்சிடியன் பிளாக் மற்றும் ப்யூரிஸ்ட் ப்ளூ வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வரும்.

இந்த ஸ்மார்ட்போன் விவோ, அமேசான், ஃப்ளிப்கார்ட், பேடிஎம், பஜாஜ் ஃபின்சர்வ் இஎம்ஐ ஸ்டோர் மற்றும் ரீடெயில் கடைகளில் நேற்று முதலே (அக்டோபர் 11) வாங்க கிடைக்கிறது.

விவோ Y20T ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

- 6.51-இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே
- 1,600 X 720 பிக்சல்கள் ரெசல்யூஷன்
- மல்டி-டச் ஆதரவு


- ட்ரிபிள் ரியர் கேமராக்கள்
- 13MP (f/2.2) முதன்மை சென்சார்
- 2MP (f/2.4) மேக்ரோ லென்ஸ்
- 2MP (f/2.4) போர்ட்ரெய்ட் சென்சார்
- போர்ட்ரெய்ட், பனோரமா, லைவ் போட்டோ, ஸ்லோ-மோஷன், டைம்-லாப்ஸ் மற்றும் ப்ரோ மோட் போன்ற கேமரா அம்சங்களை ஆதரிக்கிறது
- 8 எம்பி செல்பீ ஸ்னாப்பர்
- அளவீட்டில் 164.41 × 76.32 × 8.41 மிமீ
- எடையில் 192 கிராம்
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 11.1 கஸ்டம் ஸ்கின்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC
- அட்ரினோ 610 GPU
- 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக மேலும் விரிவாக்கலாம்
- கூடுதலாக 1 ஜிபி ரேம் வரை விரிவாக்கக்கூடிய ஆதரவு
- 4 ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ்
- சார்ஜ் செய்வதற்கான மைக்ரோ யுஎஸ்பி போர்ட்

Post a Comment

0 Comments