நார்சோ 50 மற்றும் நார்சோ 50 ப்ரோ ஸ்மார்ட்போன்களைச் சேர்ப்பதன் மூலம் ரியல்மி நிறுவனம் அதன் நார்சோ 50 சீரீஸை விரிவாக்கும் என்பது போல் தெரிகிறது.
ரியல்மி நிறுவனம் அதுசார்ந்த திட்டங்களை இன்னும் வெளிப்படுத்தவில்லை என்றாலும், குறிப்பிட்ட மாடல்கள் வருகிற நவம்பர் மாத தொடக்கத்தில் வெளியாகலாம் என்று ஒரு டிப்ஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட லான்ச் டைமில் Realme நிறுவனம் அதன் Narzo 50 மாடலை மட்டும் நாட்டிற்கு கொண்டு வருமா அல்லது Narzo 50 Pro மாடலையும் அறிமுகப்படுத்துமா என்பதில் தெளிவு இல்லை.
கடந்த மாதம், ரியல்மி நிறுவனம் அதன் நார்சோ 50ஏ மற்றும் நார்சோ 50ஐ ஆகியவைகளை நார்சோ 50 தொடரின் இரண்டு ஆரம்ப மாடல்களாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
டிப்ஸ்டர் முகுல் சர்மா, 91 மொபைல்ஸ் வலைத்தளத்துடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், ரியல்மி நார்சோ 50 அல்லது ரியல்மி நார்சோ 50 ப்ரோ இந்தியாவில் இந்த மாத இறுதியில் அல்லது வருகிற நவம்பர் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன்கள் இதுவரை எங்கும் காணப்படவில்லை.
உண்மையில் ரியல்மி தனது நார்சோ 50 மற்றும் நார்சோ 50 ப்ரோவை கடந்த மாதமே இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், நிறுவனம் அதன் நார்சோ 50 தொடரில் இரண்டு ஆரம்ப மாடல்களான நார்சோ 50ஐ மற்றும் நார்சோ 50ஏ ஆகியவைகளை மட்டுமே கொண்டு வந்தது.
இந்தியாவில் Realme Narzo 50A, Realme Narzo 50i மாடல்களின் விலை:
ரியல்மி நர்சோ 50 ஏ - 4 ஜிபி ரேம் + 64 ஜிபி - ரூ.11,499
ரியல்மி நர்சோ 50 ஏ - 4 ஜிபி ரேம் + 128 ஜிபி - ரூ.12,499
இது ஆக்ஸிஜன் ப்ளூ மற்றும் ஆக்ஸிஜன் க்ரீன் வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி நார்சோ 50ஐ - 2GB RAM + 32GB - ரூ.7,499
ரியல்மி நார்சோ 50ஐ - 4 ஜிபி ரேம் + 64 ஜிபி - ரூ.8,499
இது மின்ட் க்ரீன், கார்பன் கருப்பு வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Realme Narzo 50A அம்சங்கள்:
- ரியல்மி யுஐ 2.0
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்
- 6.5-இன்ச் எச்டி+ (720x1,600 பிக்சல்கள்) வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே
- 20: 9 விகிதம்
- 88.7 சதவீதம் ஸ்கிரீன்-டு- உடல் விகிதம்
- ARM Mali-G52 GPU மற்றும் 4GB RAM
- MediaTek Helio G85 SoC
- மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை (256 ஜிபி வரை) பயன்படுத்தி மேலும் விரிவாக்கும் விருப்பம்
- 128 ஜிபி வரை உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு
- 50 எம்பி + 2 எம்பி + 2 எம்பி
சூப்பர் நைட்ஸ்கேப், நைட் ஃபில்டர்கள், பியூட்டி மோட், எச்டிஆர், பனோரமிக் வியூ, போர்ட்ரெய்ட் மோட், டைம்லாப்ஸ், ஸ்லோ மோஷன் போன்ற கேமரா அம்சங்கள்
- 8 மெகாபிக்சல் செல்பீ
- 6000mAh பேட்டரி
- 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- USB டைப்-சி போர்ட், டூயல்-பேண்ட் வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், ப்ளூடூத் வி 5 மற்றும் டூயல் சிம் ஸ்லாட்
- 207 கிராம் எடை
- 164.5x75.9x9.6 மிமீ.
ரியல்மி நார்சோ 50i அம்சங்கள்:
- 6.5 இன்ச் டிஸ்பிளே
-89.5 சதவிகிதம் ஸ்கிரீன்-டூ-பாடி விகிதம்
- யுனிசாக் 9863 SoC
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி வரை உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு
- மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை (256 ஜிபி வரை) பயன்படுத்தி சேமிப்பு விரிவாக்கலாம்.
- 8 மெகாபிக்சல் AI பின்புற கேமரா
- 5 மெகாபிக்சல் AI செல்பீ
- 5,000 எம்ஏஎச் பேட்டரி
- எடை 195 கிராம்
- ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யுஐ கோ எடிஷன்
- 3.5mm ஆடியோ ஜாக், மைக்ரோ USB போர்ட், Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் v4.2 மற்றும் பல.
0 Comments