ஒருவழியாக Android 12 ஓஎஸ் அனைவருக்கும் வருது! எப்போது?

 கூகுள் நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-இன் முதல் பீட்டாவை, இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற அதன் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் - ஐ/ஓ 2021 நிகழ்வில்- வெளியிட்டது.



தற்போது இந்நிறுவனம் கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-இன் பைனல் வெர்ஷனை அறிமுகப்படுத்த உள்ளது போல் தெரிகிறது. ஏனெனில் உலகின் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் அதன் ஆண்ட்ராய்டு 12-க்கான பைனல் பீட்டாவை வெளியிட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 12 பீட்டா 5 ஆனது இயக்க முறைமைக்கான சமீபத்திய திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தல்களில் எந்த பெரிய மாற்றங்களையும் பேக்குகளையும் கொண்டு வரவில்லை.

சமீபத்திய அப்டேட் கூகுள் க்ளாக் ஆப்பின் புதிய 7.0 வெர்ஷனை உள்ளடக்கியது மற்றும் Pixel Launcher-இன் மெயின் ஸ்க்ரீனை ஸ்வைப் அப் செய்வதின் வழியாக பயனர்கள் சேர்ச் பாருக்கான அணுகலை பெறும் ஆதரவையும் சேர்த்துள்ளது.

மேலும் பவர் பட்டனுக்குப் பதிலாக இப்போது ஹோம் கண்ட்ரோல்களை லாக் ஸ்க்ரீன் வழியாக அணுகலாம். உடன் இந்த அப்டேட் ஆனது 'மெட்டீரியல் யூ' UI உடன் ஒரு புதிய கால்குலேட்டர் ஆப்பையும் கொண்டுவருகிறது.

ஆண்ட்ராய்டு 12 பீட்டா 5 வெளியானவுடன் Device personalisation service ஆனது இப்போது Private Compute Core என்று அழைக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 12 பீட்டா 5 வெர்ஷன் இப்போது பிக்சல் 3 மற்றும் அதற்குப் பிறகு வெளியான மாடல்களில் அணுக கிடைக்கிறது.

நீங்கள் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வலைத்தளத்திலிருந்து பைனல் பீட்டா வெர்ஷனை கைமுறையாக பதிவிறக்கம் செய்யலாம்

ஆண்ட்ராய்டு 12 பீட்டா 5 வெர்ஷன் - ஒரு கடைசி பீட்டா பதிப்பு என்று கருதப்படுவதால் வரும் வாரங்களில் நிலையான மற்றும் இறுதி ஆண்ட்ராய்டு 12 வெர்ஷன் வெளியிடப்படலாம் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் கூகுள் நிறுவனம் இந்த மாதம் அதன் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிகழ்வில் நிறுவனம் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-இன் இறுதி பதிப்பை வெளியிடலாம்.

நினைவூட்டும் வண்ணம், சமீபத்தில் கூகுள், தனது மிட்-ரேன்ஜ் மாடலான Pixel 5a ஸ்மார்ட்போனை அமெரிக்கா மற்றும் ஜப்பானில் அறிமுகப்படுத்தியது.

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இது டிவைஸ் செக்யூரிட்டிக்காக டைட்டன் எம் செக்யூரிட்டி மாட்யூல் உடன் வருகிறது.

மேலும் இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்குகிறது மற்றும் பயனர்கள் குறைந்தது மூன்று வருட மென்பொருள் மேம்படுத்தல்களைப் பெறுவார்கள் என்றும் கூகுள் உறுதி அளித்துள்ளது.

Post a Comment

0 Comments