இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் இலகுரக வர்த்தக வாகனங்களில் பிஎஸ்-6 விதிகளுக்குட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள மாடல் மாருதி சுஸுகி சூப்பர் கேரி தான். மாருதி சுஸுகியின் சிஎன்ஜி மற்றும் ஸ்மார்ட் ஹைப்ரிட் வாகனங்களை உள்ளடக்கிய Mission Green Million முன்னெடுப்பின் கீழ் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய மாருதி சுஸுகி இந்தியாவின் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை பிரிவு அதிகாரி சஷாங்க் ஸ்ரீவஸ்தவா, மாருதி சுஸுகி வர்த்தக வாகன பயன்பாட்டின் கீழ் 56 ஆயிரம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் சூப்பர் கேரி வாகனம், மினி-டிரக் செக்மென்டின் கீழ் வருகிறது.
சமகால கட்டத்திற்கு ஏற்றவாறான கட்டமைப்புகள் கொண்டு இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பான இயக்கம், பயன்பாடு மற்றும் தரத்துடன் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது என சஷாங்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
வர்த்தக பயன்பாடுக்குரிய தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக வணிகதுறைக்கு இந்த வாகனம் சிறந்த தேர்வாக அமையும். மேலும், இது சுற்றுச்சூழலுக்கு உகந்த
மாருதி சுஸுகி சூப்பர் கேரி வாகனத்தில் 4 சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது 64 பிஎச்பி பவர் மற்றும் 85 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும். இந்த வாகனத்தில் டூயல்-ஃப்யூவெல் கொண்ட சிஎன்ஜி மற்றும் 5லிட்டர் பெட்ரோல் எரிவாயு கலன் உள்ளது.
மேலும் 4 சிலிண்டர் கொண்ட மினி-டிரக் கமர்ஷியல் வாகனமாகவும் மாருதி சுஸுகி சூப்பர் கேரி உள்ளது. இந்த வாகனத்தில் சீட்டு பெல்டு ரிமைண்டர், பூட்டப்படக்கூடிய கிளவ்பாக்ஸ், பெரியளவில் லோடிங் டெக் உள்ளிட்ட சிறப்பான அம்சங்கள் உள்ளன.
இந்தியாவில் இந்த வாகனம் சிறப்பான விற்பனையை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயமாக இலகுரக வர்த்தக வாகன பயன்பாட்டில் சூப்பர் கேரி மாடல் சிறப்பான வரவேற்பை பதிவு செய்யும். இந்த வாகனம் டாடா ஏஸ் மாடலுக்கு சரிநிகர் போட்டியை வழங்கும்.
0 Comments