விந்தணுக்களின் உற்பத்தி
அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆண்களின் விந்து உற்பத்தியை பாதிக்கும் என கூறப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பவர்களை விட காய்கறிகள், பழங்கள் நிறைந்த சைவ உணவு பழக்கம் உள்ளவர்களுக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
புகைப்பிடித்தல், மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு உயிரணுக்களின் செயல்திறன் வெகுவாகக் குறைவாதகக் கூறப்படுகிறது.
ஆண்கள் விந்தணு உற்பத்தி பாதிக்காமல் இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
பதப்படுத்தப்பட்ட இறைச்சி மேற்கத்திய நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மேற்கத்திய நாடுகளில் இந்த ஆண்மைக் குறைபாடு பிரச்சினை அதிக அளவில் இருப்பதாகவும் விந்தணு உற்பத்தி குறைபாடு உண்டாவதாகவும் ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவிலும் அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றைத் தவிர்ப்பது மிக முக்கியம்.
கார்பனேட்டட் பானங்கள்:
கார்பனேட்டட் பானங்களில் வேதிப்பொருள்கள், சர்க்கரையும் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. பூச்சிக்கொல்லிக்கு இணையான தன்மையைக் கொண்டிருப்பதால் டயட்டில் இருப்பவர்கள் மட்டுமல்ல, யாரையும் மருத்துவர்கள் கார்பனேட்டட் பானங்கள் குடிப்பதை அனுமதிப்பதோ பரிந்துரைப்பதோ கிடையாது. அந்த அளவிற்கு அதில் தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருள்கள் இருக்கின்றன. அவை உடலுறுப்புகளை பாதிப்பது, உடல் பருமனுக்குக் காரணமாவது மட்டுமல்லாது, உயிரணுக்களான விந்தணுக்களின் உற்பத்தி மற்றும் செயல் திறனையும் பாதிக்கச் செய்கிறது.
பாலாடைக் கட்டி
பாலில் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது. அது பற்களுக்கும் எலும்புகளுக்கும் ஆரோக்கியத்தையும் வலுவையும் கொடுக்கிறது. ஆனால் அதே பாலில் பல வகைகள் உண்டு. அவற்றிலுள்ள கொழுப்புச் சத்தின் அளவைப் பொருத்து அவற்றின் தன்மை பாகுபாடு செய்யப்படுகிறது. பொதுவாக கொழுப்பு குறைவாக உள்ள அல்லது கொழுப்பு முற்றிலும் நீக்கப்பட்ட பாலையே பயன்படுத்த ஊட்டச்சத்து நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். ஏனெனில் கொழுப்பு நிறைந்த பால் கொலஸ்டிராலின் அளவை அதிகப்படுத்துவது மட்டுமல்லாமல், ஆண்களின் ஆண்மைத் தன்மையை வரை பாதிக்கும். பாலாடைக் கட்டி மற்றும் கொழுப்பு நிறைந்த பால் பொருட்களளை அதிகமாக எடுத்துக் கொள்வதனால் ஆண்களின் விந்தணுக்கள் உற்பத்தி குறைபாடு ஏற்படுவதோடு ஆண்மைத் தன்மையையும் பாதிக்கும்.
சோயா உணவு வகைகள்
சோயாவில் அதிக அளவில் புரதச்சத்து இருக்கிறது தான். அதற்காக சோயா பால், டோஃபு, சோயா மீல்மேக்கர் இப்படி அடிக்கடி சோயாவை உணவில் சேர்ப்பதை ஆண்கள் வெகுவாக குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சோயா அதிகமாக எடுத்துக் கொள்ளும் ஆண்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், அதிகமாக சோயா பொருள்களை எடுத்துக் கொண்ட ஆண்களில் 80 சதவிகிதத்துக்கும் மேலான ஆண்களுக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுவதாக பாஸ்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதனால் சோயா மற்றும் சோயாவினால் செய்யப்பட்ட பொருள்களை ஆண்கள் உணவில் அளவோடு சேர்த்துக் கொள்வது நல்லது
0 Comments