செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த புதிய டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை இலவசமாக வழங்கும் நோக்கத்தின் கீழ் ஏர்டெல் நிறுவனம் சில புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
புதிய Disney+ Hotstar Mobile சந்தாவை வழங்கும் 5 புதிய Jio பிளான்கள் அறிமுகம்!
இந்த புதிய திட்டங்கள் ஆனது ரூ.499 என்கிற விலையில் தொடங்கி ரூ.2,798 வரை செல்கிறது
மறைமுகமாக BSNL பார்த்த வேலை; கம்பெனி மெசேஜை பார்த்து ஷாக் ஆன பயனர்கள்!
நினைவூட்டும் வண்ணம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுவை வழங்கிய பழைய / முந்தைய ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களை விட இவைகள் விலை அதிகம். பழைய திட்டங்கள் ரூ.448-இல் தொடங்கி மற்றும் ரூ.2,698 வரை நீண்டன.
அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய திட்டங்களும் அவற்றின் நன்மைகளும்:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தவுடன் வரும் புதிய ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விரிவான நன்மைகள்:
ரூ.499 மதிப்புள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலின் ஒரு வருட சந்தாவுடன் வரும் ரூ.499 ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் தான் இந்த பட்டியலியேயே உள்ள மிகவும் மலிவான பிளான் ஆகும்.
இது தினசரி 3 ஜிபி அளவிலான டேட்டா, 'ட்ரூலி அன்லிமிடெட்'வாய்ஸ் கால் நன்மைகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மெசேஜ்களை மொத்தம் 28 நாட்களுக்கு வழங்குகிறது.
ரூ.4999 அறிமுகத்தின் விளைவாக முன்னதாக ரீசார்ஜ் செய்ய கிடைத்த - டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் வரும் - ரூ.448 திட்டம் இனி ரீசார்ஜ் செய்ய கிடைக்காது.
அடுத்ததாக உள்ள ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஆனது இது தினசரி 2 ஜிபி அளவிலான டேட்டா, 'ட்ரூலி அன்லிமிடெட்'வாய்ஸ் கால் நன்மைகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மெசேஜ்களை மொத்தம் 56 நாட்களுக்கு வழங்குகிறது.
ரூ.699 ஆனது முன்னதாக ரீசார்ஜ் செய்ய கிடைத்த ஏர்டெல் ரூ.599-க்கான மாற்றாகும்.
ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்கும் கடைசி ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ரூ.2,798 ஆகும்.
இது 365 நாட்களுக்கும் ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை வழங்கும். இந்த ஓராண்டு திட்டமானது பழைய ரூ.2,698 திட்டத்தை இனி கிடைக்காமல் செய்யும்.
வழக்கமான டேட்டா + வாய்ஸ் + எஸ்எம்எஸ் நன்மைகள் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவைத் தவிர, மேலே விவரக்கிப்பட்டுள்ள ஏர்டெல் பிளான்கள், 30 நாட்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷனுக்கான இலவச சோதனை, ஹெல்யூடூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் அணுகலையும் வழங்கும்.
0 Comments