6.8-inch டிஸ்பிளே, 108MP கேமரானு வாய்பிளக்க வைக்கும் Motorola Edge 2021 மாடல்

 

மோட்டோரோலா எட்ஜ் 2021 எடிஷன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. உடன் இது 30W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது, இது இரண்டு நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்கும் என்று கூறப்படுகிறது.

 

ஹைலைட்ஸ்:

  • மோட்டோரோலா எட்ஜ் 2021 அறிமுகம்
  • 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது
  • 108 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது
மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் (2021) மாடல், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜி ஸ்மார்ட்போனின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த முறை, லெனோவாவுக்குச் சொந்தமான மோட்டோரோலா பிராண்ட் அதன் கர்வ்டு ஸ்க்ரீன் வடிவமைப்பை கைவிட முடிவு செய்துள்ளது மற்றும் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் மெல்லிய பெஸல்களை வழங்குகிறது. இதன் விளைவாக அது தடிமனான "கன்னத்துடன்" தட்டையான டிஸ்பிளேவுடன் வருகிறது.
மற்ற வடிவமைப்பு சார்ந்த விடயங்களை பொறுத்தவரை, செல்பீ கேமராவிற்கான சென்ட்ரல் ஹோல்-பஞ்ச் கட்-அவுட் மற்றும் பின்புறத்தில் ட்ரிபிள் கேமரா அமைப்பு உள்ளது.

மற்றொரு அப்டேட் ஆக, மோட்டோரோலா எட்ஜ் (2021) முதல் தலைமுறை மோட்டோரோலா எட்ஜ் மற்றும் மோட்டோரோலா எட்ஜ்+ மாடலை விட 60 சதவிகிதம் வேகமாக இருப்பதாகக் கூறப்படும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளேவுடன் வருகிறது.

மோட்டோரோலா எட்ஜ் (2021) விலை:

மோட்டோரோலா எட்ஜ் (2021) மாடலின் சிங்கிள் 8ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது அமெரிக்காவில் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.52,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது சிங்கிள் நெபுலா ப்ளூ நிறத்தில் வாங்க கிடைக்கும், இது ஆகஸ்ட் 23 முதல் அமெரிக்காவில் ப்ரீ ஆர்டர் செய்ய கிடைக்கும், பின்னர் செப்டம்பர் 2 முதல் பெஸ்ட் பை, பி & எச் போட்டோ, அமேசான்.காம் மற்றும் மோட்டோரோலா.காம் வழியாக விற்பனைக்கு வரும்.


வரும் மாதங்களில் இது கனடாவிற்கு வரும் என்று தெரிகிறது. இருப்பினும் தற்போது வரை இது இந்திய சந்தையில் எப்போது அறிமுகமாகும், விற்பனைக்கு வருமா என்கிற தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மோட்டோரோலா எட்ஜ் (2021) அம்சங்கள்:

- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ஐ அடிப்படையிலான யுஎக்ஸ்
- 6.8 இன்ச் Full எச்டி+ (1,080x2,460 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்ப்ளே
- 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 576 ஹெர்ட்ஸ் டச் லேடன்சி
- 20.5: 9 ஆஸ்பெக்ட் ரேஷியோ
- 90.6 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி விகிதம்
- எச்டிஆர் 10 ஆதரவு

- குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G SoC
- அட்ரினோ 642L GPU
- 8 ஜிபி ரேம்
- 256 ஜிபி ஸ்டோரேஜ்

- ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
- 108 மெகாபிக்சல் மெயின் கேமரா
- 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா
- இது 119 டிகிரி பீல்ட் ஆப் வியூ (FoV) மற்றும் மேக்ரோ விஷன் கேமராவாகவும் செயல்படும்
- உடன் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா

- 5G, Wi-Fi 6E, Bluetooth v5.2, GPS, NFC மற்றும் USB Type-C போர்ட்
- ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஆம்பியண்ட் லைட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோஸ்கோப், மேக்னடோமீட்டர் (காம்பஸ்) மற்றும் பாரோமீட்டர்
- ஃபேஸ் அன்லாக்
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- 5,000 எம்ஏஎச் பேட்டரி
- 30W ஃபாஸ்ட் சார்ஜிங்
- அளவீட்டில் 169x75.6x8.99 மிமீ
- எடையில் 200 கிராம்
- IP52 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆதரவு .

Post a Comment

0 Comments