துருவ் விக்ரமின் வர்மா படத்திற்கு பாலிவுட் நாயகி- தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்

விக்ரமின் மகன் துருவ் முதன்முதலாக வர்மா என்ற படம் மூலம் சினிமாவில் களமிறங்க இருந்தார். ஆனால் பட படப்பிடிப்பில் ஏதோ பிரச்சனை ஏற்பட தயாரிப்பாளர் படத்தை வெளியிட முடியாது என்று கூறிவிட்டார்.
இப்போது அதே படத்தை துருவ் வைத்து வேறொரு டீமுடன் இயக்க தயாராகி வருகின்றனர்.
இப்பட இயக்குனர் என்று பல பெயர்கள் அடிபடுகிறது, இந்த நிலையில் இப்படத்தில் நாயகியாக பாலிவுட்டில் வெளியான October படத்தின் நாயகி பனிதா சந்து கமிட்டாகி இருக்கிறாராம்.
இதனை தயாரிப்பாளரே தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Post a Comment

0 Comments