WhatsApp மூலம் தடுப்பூசிக்கு பதிவு செய்வது எப்படி? WhatsAppல் தடுப்பூசி சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது எப்படி?

 கோவிட்-19 தடுப்பூசி பயனாளிகள் இப்போது வாட்ஸ்அப்பில் 'மைகோவ் கொரோனா ஹெல்ப் டெஸ்க்' (MyGov Corona Helpdesk) மூலம் தங்களின் முன்பதிவு இடத்தை எளிமையாகப் பதிவு செய்யலாம் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தவிர, உலகின் பிரபலமான உடனடி மெசஜ்ஜிங் பயன்பாடான வாட்ஸ்அப் மூலம் இனி பயனர்கள் தங்களின் அருகிலுள்ள தடுப்பூசி மையத்தையும் எளிதாக சில நொடிகளில் கண்டறிய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் எப்படி தடுப்பூசிக்கான ஸ்லாட்டை பதிவு செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள். WhatsApp மூலம் தடுப்பூசிக்கான ஸ்லாட்களை புக்கிங் செய்வது எப்படி? MyGov Corona Helpdesk சாட்போட்டை இனி பயனர்கள் WhatsApp மூலமாகத் தொடர்புகொண்டு, அவர்களுக்குத் தேவையான கோவிட்-19 தடுப்பூசிக்கான ஸ்லாட்களை புக்கிங் செய்துகொள்ளலாம். 


இதைச் செய்ய, பயனர்கள் அவர்களின் வாட்ஸ்அப் இல் இருந்து MyGov Corona Helpdesk உதவி எண் '9013151515' என்ற எண்ணிற்கு 'Book Slot' என்று டைப் செய்து மெசேஜ் அனுப்ப வேண்டும். இது அந்தந்த மொபைல் தொலைபேசி எண்ணில் ஆறு இலக்க ஒரு முறை கடவுச்சொல் ஆன OTP எண்ணை உருவாக்கும். இனி எளிமையான முறையில் வாட்ஸ்அப் மெசேஜ் செய்து தடுப்பூசிக்கு புக்கிங் செய்யலாமா? சரியான OTP எண்களை உள்ளிட்ட பின்னர், பயனர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திற்கான சரியான பின்கோடு விபரம் மற்றும் தடுப்பூசி வகையின் அடிப்படையில் விருப்பமான தேதி மற்றும் இடத்தை தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து பயனர்களும் தங்கள் தடுப்பூசி நியமனத்தின் மையம் மற்றும் நாள் பற்றிய உறுதிப்படுத்தலைப் பெற மேலே குறிப்பிட்டுள்ள வரிசை செயல்முறையைச் சரியாகப் பின்பற்றினால் மட்டும் போதுமானது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய சிக்கல்: இந்த 8 ஆப்ஸை உடனே டெலீட் செய்யுங்கள்.. 

கூகிள் வெளியிட்ட அவசர அறிவிப்பு வாட்ஸ்அப் இல் MyGovIndia கொரோனா ஹெல்ப் டெஸ் அம்சம் "இந்தியக் குடிமக்களின் வசதிக்கான ஒரு புதிய சகாப்தத்தை நமது அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இனி ​​உங்கள் தொலைப்பேசியில் இருந்தே, COVID19 தடுப்பூசி ஸ்லாட்களை சில நிமிடங்களில் எளிதாகப் பதிவு செய்யுங்கள். MyGovIndia கொரோனா ஹெல்ப் டெஸ்கிற்கு 'Book Slot' மெசேஜ் அனுப்புங்கள். WhatsApp இல் OTP ஐ சரிபார்க்கவும், வழிமுறைகளைப் பின்பற்றிப் பயனடையுங்கள்" என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது டிவிட்டர் பக்கம் வழியாக ட்வீட் செய்துள்ளார். மக்களுக்காக தொற்று காலத்தில் செயல்பட்ட பாதுகாப்பு அம்சம் வாட்ஸ்அப்பில் MyGov Corona Helpdesk அம்சம் மார்ச் 2020 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, 

தொற்றுநோய்களின் போது கோவிட் தொடர்பான தகவல்களின் உண்மையான ஆதாரங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளதாகவும், 4 கோடிக்கு மேல் பொதுச் சுகாதார நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய கருவியாக விளங்குகிறது என்றும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இந்த MyGov Corona Helpdesk மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Phantom X ஸ்மார்ட்போனுக்கு உலகளவில் இப்படி ஒரு எதிர்பார்ப்பா? அறிமுகத்திற்கு முன்பே ஏகபோக மவுசா இருக்கே.! தடுப்பூசி சான்றிதழ்களையும் வாட்ஸ்அப் மூலம் பதிவிறக்கம் செய்யலாமா? உண்மை தானா? முன்னதாக ஆகஸ்ட் 5 ம் தேதி, 

மைகோவ் மற்றும் வாட்ஸ்அப் பயனர்கள் சாட்போட்டில் இருந்து தடுப்பூசி சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யும் திறனை இந்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் இன்னும் சிலருக்குத் தெரியாமல் இருக்கிறது. கோவின் ஆப் மூலம் தடுப்பூசி சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யும் மக்கள், அதேபோல் சில நொடியில் வாட்ஸ்அப் பாட் மூலம் அவர்களின் தடுப்பூசி சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மனிதனின் வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்துகிறோம் "தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாதாரண மனிதனின் வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்துகிறோம்! இப்போது கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்அப் மூலம் பதிவிறக்கம் செய்ய MyGov கொரோனா ஹெல்ப் டெஸ்க் மூலம் 3 எளிய செயல்முறைகளைச் செய்தால் போதுமானது. முதலில் உங்கள் வாட்ஸ்அப் இல் '91 9013151515' என்ற எண்ணைச் சேமிக்கவும். பின்னர்,

 'covid certificate' என டைப் செய்து அனுப்புங்கள். உங்களுக்கான OTP ஐ உள்ளிடவும், உங்களுக்கான சான்றிதழ் தானாகப் பதிவிறக்கம் செய்யப்படும்" என்று சுகாதார அமைச்சர் ட்வீட் செய்துள்ளார். இது சோழர் 11 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தியது: தமிழர் பெருமையை எடுத்து சொல்லும் புதிய கண்டுபிடிப்பு.! 32 லட்சத்துக்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வாட்ஸ்அப் மூலம் பதிவிறக்கம் இதுவரை, சுமார் 32 லட்சத்துக்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் நாடு முழுவதும் உள்ள பயனர்களால் வாட்ஸ்அப் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மைகோவ் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் சிங் கூறுகையில், மைகோவ் கொரோனா ஹெல்ப் டெஸ்க் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான குடிமக்களுக்குப் பயனளிக்கும் பாதையை உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். கோவிட் காலத்தில் பாதுகாப்பான வாழ்க்கைக்குத் தொழில்நுட்ப தீர்வாக அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments