Disappearing Messages: வாட்ஸ்அப் இணைத்த இந்த புது ஆப்ஷனை கவனித்தீர்களா

 Whatsapp to add a new option for disappearing messages feature Tamil NewsWhatsapp to add a new option for disappearing messages feature Tamil News : வாட்ஸ்அப் சமீபத்தில் “ஒருமுறை பார்க்கவும்” அம்சத்தைச் சேர்த்தது. இது அடிப்படையில் மறைந்து போகும் செய்திகள் அம்சத்தின் விரிவாக்கம். விரைவில் இதற்கான புதிய விருப்பத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 90 நாட்களுக்கான ஒரு புதிய நேர வரம்பு அமைப்பை வாட்ஸ்அப் சோதித்து வருகிறது. அதன் பிறகு சாட்டில் அனுப்பப்படும் செய்திகள் மறைந்துவிடும்.

பயனர்கள், 7 மற்றும் 90 நாட்கள் விருப்பங்களைத் தவிர 24 மணி நேர விருப்பத்தையும் பார்ப்பார்கள். இந்த செய்தி சேவை இன்னும் பயனர்களுக்கு தனிப்பயனாக்கக்கூடிய விருப்பத்தை வழங்கவில்லை. அங்கு டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற பிற மெசேஜிங் பயன்பாடுகளில் சில நொடிகள், மணிநேரங்கள் அல்லது நாட்களுக்குப் பிறகு செய்திகள் மறைந்துவிடும்.

நீங்கள் காணாமல் போகும் செய்திகள் அம்சத்தை இயக்கும்போது, ​​வாட்ஸ்அப் சாட்டில் “நீங்கள் காணாமல் போகும் செய்திகளை இயக்கியுள்ளீர்கள். புதிய செய்திகள் XXX நாட்களுக்குப் பிறகு மறைந்துவிடும்” என்கிற செய்தியை காண்பிக்கும், எதிர்கால மேம்படுத்தலில் புதிய விருப்பங்கள் கிடைக்கும் என்று WaBetaInfo தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப்பின் 2.21.9.6 ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில், இந்த புதிய அம்சத்தை காணலாம். உங்களுக்கு தெரியாத நிலையில், ஒரு செய்தி மறைவதற்கு முன்பு அந்த பயனர் பேக்கப்பை (backup) உருவாக்கினால், காணாமல் போகும் செய்தி backup-ல் சேர்க்கப்படும்.

பயனர், பேக்கப்பிலிருந்து மீட்டமைக்கப்படும் போது மறைந்து போகும் செய்திகள் நீக்கப்படும்.
பயனர் ஏழு நாட்களில் வாட்ஸ்அப்பை திறக்கவில்லை என்றால், அந்த செய்திகள் மறைந்துவிடும். இருப்பினும், வாட்ஸ்அப் திறக்கும் வரை செய்தியின் முன்னோட்டம் அறிவிப்புகளில் காட்டப்படும். வாட்ஸ்அப்பில் காணாமல் போகும் செய்திகளை நீங்கள் எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது இங்கே.

வாட்ஸ்அப்: காணாமல் போகும் செய்திகளை எப்படி இயக்குவது?

ஸ்டெப் 1: உங்கள் ஆண்டிராய்டு அல்லது iOS ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் சாட்டை திறந்து, எந்த தொடர்பு சாட்டையும் பார்வையிடவும்.

ஸ்டெப் 2: நீங்கள் அந்தத் தொடர்பின் பெயரை க்ளிக் செய்யவும். பின்னர் “காணாமல் போகும் செய்திகள்” அமைப்பை மீண்டும் க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 3: கேட்கப்பட்டால், தொடரவும் என்பதை க்ளிக் செய்யவும் மற்றும் On என்பதைத் தேர்ந்தெடுக்கவும். காணாமல் போகும் செய்திகளை முடக்க விரும்பினால், நீங்கள் இந்த அமைப்பிற்குத் திரும்பிச் சென்று தேர்ந்தெடுக்கலாம். க்ரூப் சாட்டில் காணாமல் போகும் செய்திகளை இயக்க அதே செயல்முறையை நீங்கள் பின்பற்றலாம்.

Post a Comment

0 Comments