கங்கனாவின் ‘தலைவி‘ ரிலீஸ் தேதி… திரையரங்கு திறந்ததும் சூப்பர் அறிவிப்பு

 சென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ள தலைவி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கங்கனா ரணவத் ஜெயலலிதாவாகவும், அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் ஆகவும் நடித்துள்ளனர். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த படமானது செப்டம்பர் 10ந் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. போஸ்டருடன் மாஸாக வெளியான கேஜிஎஃப் 2 ரிலீஸ் தேதி... எப்போ தெரியுமா மக்கள் மனதில் இடம்பிடித்தார் தமிழக அரசியல் வரலாற்றில் முத்திரை பதித்து சென்றிருப்பவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. திரைப்படம் கதாநாயகியாக தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், பின் நாளில் அதிமுகவின் இணைந்து அரசியலில் குறிப்பிடத் தகுந்த பெயரைப் பெற்றார். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின்னர், 


பல போராட்டங்களைக் கடந்த அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனார். அதன்பின்னர் தனி ஒரு பெண்ணாக இருந்து முதலமைச்சராகி, தனது அரசியல் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டார். கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலம் குன்றிய அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், 75 நாட்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தலைவி இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இயக்குநர் விஜய் தலைவி திரைப்படத்தை எடுத்துள்ளார். இதை விஷ்னு வர்தன் இந்துரி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசைக்கவுள்ளார். படத்திற்கு ‘தலைவி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. கலைஞராக நாசர் மேலும் இந்த படத்தில் ஆர்எம் வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும், ஜெயலலிதாவின் அம்மா சந்தியா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை பாக்யஸ்ரீயும், எம்ஜிஆரின் மனைவி ஜானகி கதாபாத்திரத்தில் மதுபாலாவும் நடித்துள்ளனர். முக்கியமாக கருணாநிதி கதாபாத்திரத்தில் நாசர் நடித்துள்ளார். கொரோனா தொற்று இந்த படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் கடந்த முடிவடைந்ததை படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா தொற்று, லாக் டவுன் போன்ற காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோடப்பட்டது. படம் ஓடிடியில் வெளியிட பல நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் படக்குழுவினர், திரையரங்கில் மட்டுமே திரைப்படத்தை வெளியிடுவது என்ற முடிவில் தீர்க்கமாக இருந்தனர். செப்டம்பர் 10ந் தேதி தமிழகததில் (ஆகஸ்ட் 23) முதல் 50சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, படக்குழு தலைவி படத்தின் ரிலீஸ் செய்தியை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 10-ம் தேதி தலைவி திரைப்படம் வெளியாகும் என்று புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தலைவி ஒரே நேரத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Post a Comment

0 Comments