வோடபோன் நிறுவனத்திற்கு சோதனை மேல் சோதனை: தெறிச்சு ஓடிய 43 லட்சம் பேர்.! டிராய் அறிவிப்பு

 வோடபோன் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சலுகைகளை வழங்கி வருகிறது. ஆனாலும் இந்த நிறுவனத்தில் இருந்து அதிக வாடிக்கையாளர்கள் வெளியேறியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது வோடபோன் நிறுவனத்திலிருந்து கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 43 லட்சம் வாடிக்கையாளர்கள் வெளியேறி உள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது. குறிப்பாக கடன் நெருக்கடி காரணமாக எதிர்கால செயல்பாடுகள் கேள்விக்குறியாகியுள்ள வோடபோன் நிறுவனத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 42.8 லட்சம் வாடிக்கையாளர்கள் வெளியேறியுள்ளனர். 

ஆனாலும் போட்டி நிறுவனங்களான ஜியோவில் 54.6 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். பின்பு ஏர்டெல் நிறுவனத்தில் 38.1 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஜியோ நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 43.6 கோடி என்று தகவல் வெளிவந்துள்ளது. பின்பு ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 35.2 கோடியாக அதிகரித்துள்ளன எனவும் கூறப்படுகிறது. இது சோழர் 11 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தியது: தமிழர் பெருமையை எடுத்து சொல்லும் புதிய கண்டுபிடிப்பு.! மேலும் 2021 ஜூன் நிலவரப்படி நாட்டின் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 120.2 கோடியாக அதிகரித்துள்ளது. 


பின்பு இது மாத அடிப்படையில் 0.34 சதவீத வளர்ச்சியாகும். குறிப்பாக டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து சிறப்பான சலுகைகள்மற்றும் திட்டங்களை வழங்கிய வண்ணம் உள்ளன என்றுதான் கூறவேண்டும். Phantom X ஸ்மார்ட்போனுக்கு உலகளவில் இப்படி ஒரு எதிர்பார்ப்பா? அறிமுகத்திற்கு முன்பே ஏகபோக மவுசா இருக்கே.! வோடபோன் ஐடியாவின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் சமீபத்தில் வோடபோன் ஐடியாவின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் குறிப்பிட்ட நன்மைகள் வழங்கப்பட்டது. அதாவதுவோடபோன் ஐடியாவின் பிரபலமான ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் டபுள் டேட்டா நன்மை மற்றும் ZEE5 சந்தா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் முன்பு 2ஜிபி டேட்டா மட்டுமே கிடைத்தது, ஆனால் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ள டபுள் டேட்டா நன்மை மூலம் தினசரி 4ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். எனவே இந்த திட்டத்தின் மூலம் இதன்

 வாடிக்கையாளர்கள்மொத்தமாக 224ஜிபி டேட்டாவை பெறமுடியும். மாசடைந்த காற்றை உறிஞ்சிக்கொண்டு, சுத்தமான காற்றை வெளியிடும் புகை கோபுரம்.! டெல்லியில் புதிய ஏற்பாடு.! வோடபோன் ஐடியாவின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். பின்பு இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் வரம்பற்ற அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளையும் பெறமுடியும். இதுதவிர ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் சலுகை, Binge ஆல்-நைட் சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெறமுடியும். 

குறிப்பாக நாம் கொடுக்கும் பணத்திற்கு தகுந்தபடி இந்த திட்டத்தில் அனைத்து நன்மைகள் கிடைக்கிறது என்றே கூறலாம். மேலும் இப்போது இந்ததிட்டத்தில் ZEE5 பிரீமியம் சந்தாவும் கிடைப்பதால் அதிக மக்கள் இந்த திட்டத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சோனி PlayStation 5 ஆகஸ்ட் 26 ஆம் தேதி இந்தியாவில் கிடைக்குமா? உடனே இதை செய்து புக்கிங் செய்யுங்க மக்களே.! ரூ.267 ப்ரீபெய்ட் திட்டம் அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் ரூ.267 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில்25ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் Vi Movies இலவச அணுகல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் வழங்கப்படுகிறது. மேலும் வோடபோன் ஐடியாவின் ரூ.267 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

Post a Comment

0 Comments