விரைவில் அறிமுகமாகும் ஒப்போ எப்19எஸ் ஸ்பெஷல் எடிஷன்

 ஒப்போ எப்19, எப்19 ப்ரோ மற்றும் எப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து ஒப்போ எப்19எஸ் ஸ்பெஷல் எடிஷன் எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஒப்போ நிறுவனம். அதாவது ஒப்போ எப்19 ஸ்மார்ட்போனில் இருக்கும் அதே அம்சங்கள் இந்த ஒப்போ எப்19எஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் வடிவம் மற்றும் நிறங்களில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் களமிறங்கும் Oppo F19s ஸ்மார்ட்போன்.. இது சாதாரண போன் இல்லை.. ஸ்பெஷல்.! ஒப்போ எப்19 ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் எப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 2400×1080 பிக்சல் தீர்மானம்,

 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. ஒப்போ எப்19 ஸ்மார்ட்போனில் தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஒப்போ எப்19 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


அதேபோல் ஒப்போ எப்19 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. உங்க சந்தோஷம் முக்கியம்: ரியல்மி ரசிகர் விழா விற்பனை- அட்டகாச தள்ளுபடியுடன் ஸ்மார்ட்போன்கள்! ஒப்போ எப்19 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி portrait லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இந்த ஒப்போ எப்19 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 

கைரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ எப்19 ஸ்மார்ட்போன். முயற்சி போதும் சார் எல்லாம் சாத்தியம்- பாலைவனத்தில் வளரும் மரங்கள்: அனைத்தும் இமைக்கா கண்கள் போல் வட்ட வடிவம்! 4 ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஒப்போ எப்19 ஸ்மார்ட்போன். குறிப்பாக ஒப்போ எப்19 ஸ்மார்ட்போனில் இருக்கும் அதே அம்சங்கள் இந்த ஒப்போ எப்19எஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

Post a Comment

0 Comments